தலையில் அடித்து கதறும் 50 இளைஞர்கள்..!! நடந்தது என்ன ??

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் இஸ்பானி சென்டரில் இருக்கும் ஏழாவது தளத்தில் “இ-ஜாப்ஸ்” என்கிற பெயரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமானது செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக ரூபன் சக்கரவர்த்தி என்பவர் இருந்துள்ளார். இவனது அலுவலகத்தில் அருணா என்ற பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார்.

வெளிநாட்டு வேலைகளுக்காக இணையதளங்களில் பதிவு செய்திருக்கும் இளைஞர்களின் அலைபேசி எண்களை அறிந்து கொண்டு., தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப இருக்கும் பணியானது தங்களின் நிறுவனத்தில் உள்ளதாகவும்., மலேசியாவில் இருந்து உங்களை தொடர்பு கொண்டு பேசுவதாகவும் கூறச்சொல்லி பேசியுள்ளார்.

இதனையடுத்து இளைஞர்களிடம்., தங்களது நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்துள்ளதாகவும்., தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்றாற்போல பணி மற்றும் ஊதியம் வழங்கப்படும் என்றும்., இந்த பணி தொடர்பான விவரத்தை அறிந்து வேலையை பெற்றிட., தங்களின் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு சென்று ரூ.50 ஆயிரம் கொடுத்து., வேலைக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

இவர்களின் பேச்சினை நம்பிய இளைஞர்களும் வெளிநாட்டு வேலை என்று எண்ணி சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சென்று., ரூ.50 ஆயிரத்தை கட்டிய பின்னர்., குறித்த தேதியில் உடற்தகுதி குறித்த பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்., மலேசிய நிறுவன பணிக்கான சான்றிதழை வழங்கிவிடுவோம் என்றும்., சான்றிதழ்கள் சரியாக இருக்கும் பட்சத்தில்., ஒரே மாதத்தில் மலேசியா செல்வதற்கான விசா வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி சென்ற இளைஞர்கள் 20 நாட்கள் கடந்த நிலையில்., எந்த விதமான அழைப்பும் இல்லாததால்., சந்தேகமடைந்து நுங்கம்பாக்கம் நிறுவனத்திற்கு வந்த தருணத்தில்., நிறுவனம் மூடப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பணியாற்றிய அருணாவிற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்த சமயத்தில்., இருவரின் அலைபேசி எண்ணும் அணைத்துவைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஆவடியை சார்ந்த அருணாவை காவல் துறையினர் கைது செய்தனர். இதுமட்டுமல்லாது தலைமறைவாக இருந்த ரூபன் சக்கரவர்த்தி மற்றும் இடைத்தரகனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.