இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில், நேற்றைய ஆட்டத்தில் 52 பந்தில் 72 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் கோலி. இதில் நான்கு பவுண்டரிகளும், மூன்று சிக்கர்களும் அடங்கும்.
நேற்றைய நடந்த போட்டியில் 66 ரன்னை எடுத்த போது கோலி 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் கோலி. இதற்கு முன் ரோகித்சர்மாவை செய்த சாதனையை முறியடித்தார் அவர்.
இதுவரை விராட்கோலி 71 ஆட்டத்தில் 66 இன்னிங்சில் 2441 ரன் குவித்துள்ளார். அவர் 18 முறை நாட் அவுட் என்பதால் சராசரி 50.85 ஆகும். இதுவரை 22 அரை சதம் அடித்துள்ளார். ஆனால் இது நாள் வரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் அவர் சதம் அடித்தது இல்லை அதிகபட்சமாக 90 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர் என மூன்று வகையான போட்டிகளிலும் 50 ரன்னுக்கு மேல் சராசரி வைத்துள்ள உலகின் ஒரே வீரர் கோலி ஆவார்.
இதற்கு, முன் ரோகித்சர்மா 97 ஆட்டத்தில் 89 இன்னிங்சில் 2434 ரன் எடுத்து தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது சராசரி 32.45 ஆகும். 4 சதமும், 17 அரை சதமும் அடித்துள்ள ரோகித்சர்மா அதிகபட்சமாக எடுத்த ரன் 118 ஆகும். இதனையடுத்து புதிய சாதனையை படைத்த கோலிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.