இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டி20 போட்டியில் முதலில் விளையாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை குவித்துள்ளது.
போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டிகாக் ரீசா ஹென்றிக்ஸ் களமிறங்கினார்கள். முதல் ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச, அடுத்த ஓவர்களை தீபக் சாஹர், சைனி வீசினார்கள். சாஹர் பந்துவீச்சில் ஹென்றிக்ஸ் விரைவாக ஆட்டம் இழக்க அடுத்து வந்த அறிமுக வீரர் தெம்பா பவுமா சிறப்பாக விளையாடினார்.
சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் குயின்டன் டி காக் 52 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் விராட் கோலியின் துல்லியமான கேட்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வாண்டார் டுசென் ஜடேஜாவின் துடிப்பான பவுலிங் மற்றும் கேட்சில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
அதற்கடுத்து வந்த ஆபத்தான டேவிட் மில்லரை ஹர்டிக் பண்டியா கிளீன் போல்டாக்கி 18 ரன்களில் வெளியேற்றினர். அதுவரை நிதானமாக ஆடி கொண்டு இருந்த டெம்போ பவுமாவை மீண்டும் வந்த தீபக்சாகர் 49 ரன்களில் வெளியேபற்றினார். இறுதி நேரத்தில் பிரிட்டோரியஸ் புளுக்வயோ தலா ஒரு சிக்ஸர் அடிக்க அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்களை குவித்துள்ளது.
இந்திய தரப்பில் தீபக் 2 விக்கெட்டுகளையும் நவதீப் ஷைனி, ரவிந்திர ஜடேஜா ஹர்டிக் பண்டியா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். வாஷிங்டன் சுந்தர் தீபக் சாஹர் இருவரும் மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விளையாடியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் களமிறங்கிய நிலையில் முதலில் மெதுவாக ஆரம்பித்த இவர்கள், ரோகித் சர்மாவின் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களால், ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். ஆனால் அந்த 2 சிக்ஸர்களுடனே ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரை அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி தவானுடன் இணைந்து மிக சிறப்பாக விளையாடி நிலையில், இந்த பார்ட்னர்ஷிப்பானது 50 ரன்களுக்கு மேல் நீடித்தது. சிக்ஸர் அடிக்க முயற்சித்த தவான் தென்ஆப்பிரிக்க வீரர் மில்லரின் அசத்தலான ஒரு கை கேட்சினால் ஆட்டமிழந்து நாற்பது ரன்களில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் நடையை கட்டினார். அதற்கடுத்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் அறிவுரை சொல்லப்பட்டு வந்த ரிஷப் பண்ட் இந்த ஆட்டத்திலும் வந்த வேகத்தில் 5 பந்துகளில் 4 ரன்களில் தவறான ஒரு சாட்டை அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதற்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பக்கம் நிற்க அதற்குள் அரை சதத்தை கடந்தார் இந்திய அணி கேப்டன் விராட்கோலி. அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களையும் அடிக்க இந்திய அணி 19 ஓவர்களில் எளிதாக வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி 72 ரன்களை 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் எடுத்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி ரத்தாக, இரண்டாவது போட்டி வெற்றி பெற்ற இந்திய அணி 1 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி வருகின்ற 22ம் தேதி பெங்களுருவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது