கல்யாணத்திற்கு பச்சைகொடி காட்டிய நயன்தாரா..!!

நடிகை நயன்தாரா தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. நடிகை நயன்தாரா, கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்.

தனது முதல் படமான ஐயா படத்தில் ஸ்கூல் மாணவியாக நடித்து கவனம் ஈர்த்தவர், போக போக வளர்ந்து தற்போது மாஸ் ஹீரோயினாக மாறி உள்ளார். வரிசையாக ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.

அதிலும் கடைசி ஒரு வருடமாக நயன்தாரா வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். பிகில் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இது இல்லாமல் நெற்றிக்கண் படத்தில் கண் தெரியாத விழி மாற்றுத் திறனாளியாக நயன்தாரா நடிக்கிறார்.

தற்போது நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். நேற்றுதான் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இரண்டு பேரும் கருப்பு உடையில் கலக்கலாக இந்த விழாவை கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்போது திருமணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எப்போது இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஜோடி செம அழகா இருக்கே. ஆனா இன்னும் ஏன் கல்யாண அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆனால் நயன்தாரா தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இன்று பிகில் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

அந்த விழாவிற்கு விக்னேஷ் சிவனும் வருகிறார். அதனால் இந்த விழாவில் அவர்கள் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.