இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைத்தனர். மேற்கு இந்தோனேஷியாவின் உள்ள ஜாவா தீவின் அருகே உள்ள கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்ப்பட்டது. முன்னதாக ரிக்டர் அளவில் 5.6 ஆக அதிர்வு பதிவான நிலையில், அடுத்தடுத்து அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நில அதிர்வு 6.1 ஆக உயர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அதிர்வு அருகிலுள்ள பாலி தீவிலும் உணரப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீடீரென ஏற்பட்ட நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவோ, கட்டிடங்கள் சேதமடைந்ததாகவோ தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.