மீண்டும் காதலில் விழுந்த கவின்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று 88வது நாளை எட்டியுள்ளது. இன்று பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் லொஸ்லியாவை சாண்டி தெரியாமல் கீழே தள்ளிவிட்டு விட்டார்.

இதனால் கவின், சாண்டி மீது கோவப்பட, சாண்டிக்கும் கவினுக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்படுவது போன்று முதல் பிரோமோவில் காட்டப்பட்டது.

இரண்டாவது பிரோமோவில், டாஸ்க் நேரத்தில் லொஸ்லியாவிடம் சென்று கவின் பேசிக்கொண்டிருப்பார். இதனால் கோபமடைந்த ஷெரின் கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கோபமாக வாளியில் இருந்த பந்துகளை உதைத்து தள்ளிவிட்டு உள்ளே செல்கிறார். தற்போது வெளியாகியுள்ள பிரோமோவில் வீடியோபட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்றாவது பிரோமோவில், வீட்டினுள் கோபமாக இருக்கும் ஷெரினை தர்ஷன் சென்று சமாதானம் செய்கிறார். அதன் பிறகு ஷெரினை சிரிக்க வைக்கிறார். இன்று வெளியான பிரேமாவை வைத்து பார்க்கும்போது மீண்டும் கவின் காதலை கதையை தொடங்கியுள்ளார்.