திருப்பதி அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சிக்கியதால் அறங்காவலர் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, தற்போது ஆந்திராவில் புதிய முதலமைச்சராக பதவியேற்று கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தன்னுடைய உறவினரான ஒய்.வி சுப்பா ரெட்டி என்பவரை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராக நியமனம் செய்தார்.
இதன் பின், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய சிமெண்ட்ஸ் குழும தலைவர் சீனிவாசன் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவை சேர்ந்த குமரகுரு, உள்ளிட்ட மொத்தம் 29 பேரை அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர மாநில அரசு நியமனம் செய்தது. மேலும், இதற்கு முன் அறங்காவலர் குழுவில் இருந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட7 பேரை ஆந்திர அரசு சிறப்பு அழைப்பாளராக நியமித்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், சிறப்பு அழைப்பாளர்களுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் மீது அவர்கள் வாக்களிக்க முடியாது.