எந்தெந்த நட்சத்திரங்களில் ஒரு செயலை செய்யக்கூடாது?.!!

ஒரு செயலை செய்வதற்கு எவ்விதம் நட்சத்திரங்கள் ஆதரவாக இருக்கின்றதோ, சில செயல்களை செய்வதற்கு சில நட்சத்திரங்கள் பாதகமாகவும் இருக்கின்றன.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒரு குறிப்பிட்ட செயல்களை செய்யாமல் இருப்பது உத்தமம் ஆகும்.

மேற்கொண்டு நாம் அச்செயலை செய்யும் பட்சத்தில் நாம் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும் அல்லது நாம் எதிர்பார்த்ததற்கு எதிராகவோ நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஒரு செயலை செய்வதற்கு ஆகாத நட்சத்திரங்கள் : 

பரணி

கிருத்திகை

திருவாதிரை

ஆயில்யம்

மகம்

பூரம்

சித்திரை

சுவாதி

விசாகம்

கேட்டை

பூராடம்

பூரட்டாதி

ஆகிய 12 நட்சத்திரங்களில் சில குறிப்பிட்ட செயல்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். இந்த நட்சத்திரங்களில் சில காரியங்களை தவிர்த்தல் வேண்டும்.

அதாவது,

கடன் கொடுப்பதை தவிர்த்தல் வேண்டும்.

பிரயாணம் மேற்கொள்வதை தவிர்த்தல் வேண்டும்.

நோயாளிகள் மருந்து சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்க்க வேண்டும்.