இந்த உலகம் முழுவதும் பல விதமான விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மேலும்., இயற்கையின் ருத்ர தாண்டவங்களும் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. உலகின் பல நாடுகள் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
நிலநடுக்கோடுகள் என்று அழைக்கப்படும் டெக்ட்டானிக் தட்டுகள் மீது அமைந்துள்ள நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும்., இதனால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.
முதலில் நிலநடுக்கம் மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்படும் சேதங்கள் என்று., பின்னர் அதிகளவு நிலநடுக்கம் ஏற்படுவதன் விளைவாக சுனாமி என பல வகைகளில் பல உயிர் சேதமும்., பொருட் சேதமும் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில்., இந்தோனேசிய நாட்டில் உள்ள ஜாவா தீவின் கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 5.6 ஆக பதிவான நிலையில்., அடுத்து ஏற்பட்ட தொடர்ச்சியாக 6.1 ஆகவும் நிலநடுக்கம் பதிவானது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில்., மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.