வீட்டில் இருந்து ஓடி வந்த காதல் ஜோடி.! காவல் அதிகாரி செய்த காரியம்.!

சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் சஜூ என்ற குலசேகரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி பல இடங்களில் சந்தித்து வந்துள்ளனர். ஆறு வருடங்களாக பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் இந்த காதல் வேண்டாம் என சரண்யாவிடம் கூறியுள்ளனர்.

ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத சரண்யா தனது காதலனுடன் இது குறித்து ஆலோசித்து 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் திடீரென சரண்யா மாயமாகியுள்ளார், சரண்யாவின் பெற்றோர்கள் உறவினர் வீடுm தோழி வீடு என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மாலை குலசேகரம் காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சமடைந்துள்ளனர். தாங்கள் இருவரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். பின்னர் இருவரின் பெற்றோரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த சரண்யாவிடம் பாசப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆனால், எதையும் கண்டுகொள்ளாத சரண்யா காதலில் உறுதியாக இருந்துள்ளார். அதன் பின்னர் காவல் நிலையத்திலேயே இருவரும் மாலை மாற்றி திருமணம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புது வாழ்க்கையைத் துவங்க கலைந்து சென்றனர்.