பப்பாளியின் மருத்துவ குணங்களை நாம் ஏற்கனவே அறிவோம்., அந்த வகையில் பப்பாளி பழத்தில் இருக்கும் இவிதையினை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பது அனைவருக்கும் இருக்கும் சந்தேகத்தில் ஒன்று.
பப்பாளி பழத்தில் இருக்கும் விதையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சில நன்மைகள் உண்டு., அதனை பற்றி இந்த செய்தியில் காண்போம்.
தினமும் 2 தே.கரண்டி பப்பாளி விதையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல மருத்துவ குணங்கள் கிடைக்கிறது., பப்பாளி மற்றும் தேனில் இருக்கும் சக்தி வாய்ந்த அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூலமாக வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது.
இந்த முறையானது இயற்கையான சிறந்த முறை என்ற காரணத்தால்., உடலுக்கு தீங்கு ஏற்படும் உடல்நலக்குறைவு பிரச்சனையை தவிர்ப்பதற்கு பப்பாளிப் பழத்த்தின் விதையை தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.
பப்பாளி பழத்தின் விதையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து உடல் எடை குறையும்.
பப்பாளியில் இருக்கும் அதிகப்படியான புரதச்சத்தின் காரணமாக உடலின் வளர்ச்சிதை மாற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு., அழகான கட்டுக்கோப்பான உடலை பெற உதவுகிறது.
பப்பாளி பழத்தின் விதை மற்றும் தேனில் இருக்கும் குளுகோஸின் காரணமாக உடலில் சோர்வு ஏற்பட்டால்., அதற்கு எதிராகப் போராடி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
தேன் மற்றும் பப்பாளி விதையில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது வைரஸ் காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து., நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாத்து வருகிறது.
பப்பாளிபழத்தின் விதைகள் மற்றும் தேனில் இருக்கும் எம்சைம்கள் சத்துக்களின் காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கிறது.