சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியை சார்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவரது நண்பரின் பெயர் ஸ்ரீநாத் (வயது 26). இவர் நேற்றிரவு தனது நண்பர்களுடன் காரில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தார். இவர்கள் பயணித்த காரை சதீஷ்குமார் இயக்கியுள்ளார்.
இவர்கள் பயணம் செய்த கார் காலை 6 மணியளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள புறவழி சாலையில் வந்து கொண்டு இருந்தது. இந்த சமயத்தில்., அதே சாலையில் வேகமாக வந்து கொண்டு இருந்த டேங்கர் லாரியானது காரின் மீது மோதியுள்ளது.
எதிர்பாராத சமயத்தில்., இரு வாகனமும் மோதிக்கொண்ட நிலையில்., சதீஷ்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது நண்பரான ஸ்ரீநாத் மற்றும் அவரின் நண்பர்கள் படுகாயமடைந்த நிலையில்., இந்த விபத்தை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்., இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.