பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெரும் போட்டியாளர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு சென்றுவிடுவார்கள். இதனால் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக தங்கள் திறமைகளை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.
நேற்றைய டிக்கெட் டு பினாலே டாஸ்கில் நள்ளிரவு ஒரு மணி அளவில், நன்றாக உறங்கிக்கொண்டிருந்த போட்டியாளர் அனைவரையும் லைட்டைப் போட்டு எழுப்பிவிட்டார் பிக்பாஸ். கார்டன் பகுதியில் ஆளுக்கு ஒரு தங்கமுட்டையை வைத்து, அதனை பத்திரமாக பார்த்து கொள்பவர்களே வெற்றியாளர் என அறிவித்துவிட்டார்.
இயற்கை உபாதைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு தங்களுடைய தங்க முட்டை முன்பு போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். போட்டியின் விதிமுறை என்னவென்றால், தங்களின் முட்டையை பாதுகாத்துக்கொண்டே, மற்றவர்களின் முட்டைகளை உடைக்க வேண்டும். ஆனால் முட்டையின் சொந்தக்காரர், உடைப்படும் போது பார்த்து விட்டால், உடைத்தவர் அவுட்டாகிவிடுவார்.
சாண்டி, தர்ஷன், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இளைஞர்கள் என்பதால் பிக்பாஸ் கொடுக்கும் கஷ்டமான டாஸ்குகளை சமாளித்து விளையாடி வருகின்றனர். இவர்களோடு ஒப்பிடும் போது சேரன் வயதில் மூத்தவராக இருப்பதால் கஷ்டமான டாஸ்குகளை சமாளிக்க முடியாமல் விளையாடி வருகிறார்.
அந்த சமையத்தில் சேரனுக்கு முதுகு வலி ஏற்பட்டு கீழே அமர்ந்து விடுவார். அதன் பிறகு போட்டியாளர்கள் சேரனை உள்ளே அழைத்து சென்று படுக்கையில் அமரவைத்தார். டாஸ்குகளை சமாளிக்க முடியாமல் சேரன் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருவர் என கூறப்படுகிறது.