இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் 16 முதல் 22 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பாலியல் உறவு மற்றும் ஆபாச காணொளிகள் தொடர்பில் ஈர்க்கப்படுவதாக பகீர் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்லது.
மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மாணவ மாணவயரிடையே பாலியல் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இதில் 30 ஆங்கில பாடசாலைகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
இதன்படி குறைந்தது 33சதவீத மாணவர்களும், 24 சதவீத மாணவிகளும் உடலுறவில் ஈடுபடுவதாகவும். தங்களின் நிர்வாண படங்களை செல்போனில் பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
40 சதவீத கல்லூரி மாணவர்கள் தங்களின் லேப்டாப் கணனி மூலம் வன்முறை , ஆபாச வீடியோக்களை பார்ப்பதாகவும், ஒரு மாணவவர் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 40 ஆபாச வீடியோக்களை பார்ப்பதாகவும், நாள் ஒன்றுக்கு மும்பையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆபாச வீடியோக்கள் பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர 25 சதவீத மாணவர்கள் ஆபாச வீடியோக்களை பார்த்து அது போன்ற செயலை செய்ய தங்களை தூண்டுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 46 சதவீதத்தினர் ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடத்திய ஆய்வில் கல்லூரி மாணவியர்களில் 10 சதவீதம் பேர் ஆபாச படம் பார்த்து தவறான உறவால் கருக்கலைப்பு வரை செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், மும்பையில் மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 4 ஆயிரம் கல்லூரி மாணவிகள் கருக்கலைப்பு செய்வதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து உளவியலாளர்கள் கூறுகையில் இது போன்ற சம்பவங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பெரியவர்கள் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இது போதை பொருளை போன்றது. இது பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் சம்பவங்களுக்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.