இளைஞரின் மூளையை வெட்டி தட்டில் வைத்த மர்ம நபர்கள்..!!

சென்னையில் 24 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் அரி என்கிற அறிவழகன்(24). இவர் வழிப்பறி போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் அரியின் வீட்டுக்குள் திடீரென நுழைந்த 2 பேர், தாங்கள் கொண்டுவந்த அரிவாளைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய அரியை, சுற்றி வளைத்த இருவரும் சரமாரியாக வெட்டியுள்ளனர். அரியின் தலை, உடல், கை மற்றும் கால்களில் வெட்டிக் கொலை செய்த அவர்கள், அவரது தலையைப் பிளந்து மூளையை தனியாக ஒரு தட்டில் வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு அறிவழகனுக்கு, ஒரு பெண்ணுடன் தகராறு ஏற்பட்டதாக தெரிய வந்தது. அப்போது அப்பெண்ணின் ஆடையை அறிவழகன் கிழித்ததாக கூறப்படுகிறது.

இதனால் குறித்த பெண்ணின் மகன்களுக்கும், அறிவழகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாகவே அறிவழகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பல்புகுமார் என்பவரின் கொலையில் அரி தொடர்புடையவர் என்பதால், பழிவாங்கும் நடவடிக்கையில் அவரது தம்பி விஜய் மற்றும் கூட்டாளிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில் தப்பியோடிய இருவரையும் பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.