இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் டியூசன் எடுத்த டீச்சரை உடன் படிக்கும் 9 வயது மாணவன் ஒருவன் கொலை செய்ய கூறியதால், 14 வயது மாணவன் கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய்(30). கணவனைப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வரும் இவர் அப்பகுதியில் டியூசன் எடுத்து வருகின்றார்.
இவரது டியூசனில் 9 வயது சிறுவன் 4ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிறுவனின் தாய் டீச்சர் கஷ்டத்தில் இருக்கும் தருணத்தில் பணஉதவி செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவனின் தாய்க்கு பணம் தேவைப்பட்டதால் டீச்சரிடம் இரண்டாயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். அதற்கு டீச்சர் தரமறுத்தது மட்டுமின்றி சக மாணவர்கள் முன்பு அந்த சிறுவனின் அம்மாவை திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் உடன் டியூசனில் படிக்கும் 14 வயது மாணவனிடம் டீச்சரை கொலை செய்வதற்கு டீல் பேசியுள்ளான். இதனிடையே வழக்கம் போல் டியூசனுக்கு வந்த மாணவர்கள் டியூசன் முடிந்து செல்லும் போது டீச்சரின் வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பிள்ளான்.
இந்நிலையில் பொலிசார் விசாரணையில் குழப்பம் நீடித்துக்கொண்டே சென்றுள்ளது. எனினும் தீவிர விசாரணையில், மாணவனின் 14 வயது நண்பன் ஒரு மாலுக்குள் நண்பர்கள் 2 பேருடன் சுற்றி திரிவதை பொலிசார் கண்டுள்ளனர். அங்கிருந்த சிசிடிவி காட்சியில் அவர்கள் 750 ரூபாய்க்கு ஃபாஸ்ட் புட் கடையில் வாங்கி சாப்பிட்டதையும், 250 ரூபாய்க்கு வீடியோ கேம் விளையாடியதையும் கண்டு அதிர்ந்துள்ளனர்.
அவனிடம் விசாரித்ததில், நண்பன் கூறியதால் டீச்சரை கொலை செய்தேன். முதலில் 1000 ரூபாய் கொடுத்த 9வயது நண்பன் பின்பு 5000 தருவதாக டீல் பேசியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நண்பனுக்காக அவனது தாயை கொன்றது இந்த 14 வயது சிறுவன்தானாம்! இதையடுத்து தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றாலும், உண்மையிலேயே டீச்சரை கொன்றது யார், உண்மை நிலவரம் என்ன என்பதில் இன்னமும் குழப்பம் நீடித்து வருகிறது.