இந்தியாவின் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 6ம் தேதி, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் பொழுது செயலிழந்தது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மனம்தளராமல் நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பைப் பெறப் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
இருந்த போதில், லேண்டரை தொடர்புகொள்ளமுடியவில்லை என்று கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சிவனிடம், தமிழனாக நாட்டின் உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளீர்கள், தமிழக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சிவன் முதலில் நான் ஒரு இந்தியன். இஸ்ரோவில் ஒரு இந்தியனாகவே பணியில் அமர்ந்தேன்.
இஸ்ரோவில், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் பணி செய்கிறார்கள். பல மொழி பேசும் மக்கள் நாட்டின் வெற்றிக்காக உழைக்கின்றனர் என்று பதிலளித்துள்ளார்.