சென்னை துறைமுகத்தில் இந்திய கப்பற்படை போர்க்கப்பல் ஆனது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் இருந்த கப்பற்படை வீரர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட திட்டமிட்டனர். இந்நிலையில், கப்பலில் பணியாற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோகேந்தர் ஆகியோர் சிலருடன் சேர்ந்து நேற்று மாலை கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
தொடர்ந்து ஜோகிந்தர் பேட்டிங் செய்து கொண்டு இருந்துள்ளார், அப்போது எதிர் முனையில் இருந்து விவேக் பந்து வீசினார். எதிர்பாராதவிதமாக நெஞ்சில் பந்து படவே உடனடியாக பேட்டை கையில் பிடித்தவாறு அவர் சுருண்டு விழுந்து உள்ளார்.
இதனை பார்த்த உடன் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை 5 மணி அளவில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இறந்துபோன ஜோகிந்தர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு கடந்த மே மாதத்தில் தான் திருமணம் நடைபெற்று முடிந்தது என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவமானது பெண் வீட்டாரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரின் பெற்றோரும் கத்தி கதறி அழுகின்றனர். அவரின் மனைவியும் செய்வதறியாமல் திகைத்து போய் இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.