பெண்கள் பெரும்பாலும் மருத்துவமனை போன்ற பல்வேறு இடங்களில், பெயர் பதிவு செய்யும்பொழுது கணவரின் பெயரையோ அல்லது அவரின் தந்தையின் பெயரையோ முதல் எழுத்தாக இணிஷியல் ஆக கொடுப்பார்கள். அதே நேரத்தில் தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுதும் கூட தங்களின் கணவர் பெயரை முதல் எழுத்தாக எழுதுகின்றனர்.
அவர்களின் கல்வி, பிறப்புச் சான்றிதழ் என தந்தையின் பெயரின் முதல் எழுத்து இனிஷியலாக இருக்கும் பொழுது அலுவல் ரீதியான பல்வேறு குழப்பங்களை ஏற்படுகிறது. ஆண்களுக்கு திருமணத்துக்கு பின்பு இன்சியல் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம் ஏற்படுகின்றது?
முன்பெல்லாம் கிராமங்களில் கணவர் பெயரை சொல்ல கூட மாட்டார்கள் பெண்கள். ஆனால், அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு பெண் ஆணை போலவே திருமணத்துக்கு பிண்ணும் தன்னுடைய தந்தையின் இனிஷியலோடு இருக்க முடியும். ஆனால், ஒரு பெண் தன்னுடைய தந்தையின் பெயரை தான் இனிசியல் ஆக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தாயின் பெயரையும் இணைத்து இன்ஷியல் ஆக வைத்திருக்க சட்டத்தில் உரிமை இருக்கின்றது. எனவே, தாயின் பெயரை கூட அல்லது தாயின் பெயரை மட்டும் கூட இணிஷியல் ஆக சேர்த்துக்கொள்ளலாம். இந்த உரிமையை அரசியலமைப்பு சட்டம் பெண்களுக்கு வழங்குகின்றது.
ஒரு பெண்ணின் இன்ஷியல் மாறுவது என்பது கல்வி மற்றும் வேலை சேர்ந்தது மட்டுமல்ல. அது அவளின் சுயமரியாதையை சார்ந்த விஷயம். ஒருவருக்கு உரிமையான பொருளை இன்னொருவருக்கு எழுதி கொடுப்பதை போன்ற செயலாக இருக்கின்றது. பெண்கள் ஒன்றும் பொருட்கள் இல்லையே.? அதில் பட்டா போட்டு பெயரை எழுதிக்கொள்வதற்கு.
அவர்களுக்கு உணர்வுகள் இருப்பதை கணவர்கள் புரிந்து கொண்டு இந்த விஷயத்தில் பெண்ணின் விருப்பப்படி விட்டுவிடுவது தான் சரி. திருமணத்திற்கு பிறகு தனது நேசத்திற்குரிய தந்தையின் பெயரில் இருந்து பிரிவது, நிஜமாகவே வலியை ஏற்படுத்தும்.
திருமணம் செய்தாலும் கூட இனிஷியலை மாற்றிக் கொள்ளும் போது மனம் குறுகுறுக்க தான் செய்யும். அது உளவியல் ரீதியாக பெண்ணை பாதிக்கின்றது. திருமணமான பின்பும் பெண்கள் பலரும் தானாகவே கணவரின் பெயரை சேர்த்துக் கொள்கின்றனர்.
இந்தியாவில் தந்தையின் பெயரை இணைத்துக் கொள்வதுதான் வழக்கமாக இருக்கின்றது. தாயின் பெயரை சேர்ப்பதில்லை. கேரளா உள்ளிட்ட பல இடங்களில் தாயின் பெயரை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.