சென்னையில் உள்ள கொத்தவாசல்சாவடி பகுதியில் இருக்கும் தனியார் பெண்கள் கல்லூரியில்., பயின்று முடித்த பெண்களுக்கு பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10 மாணவிகள்., தங்களை குளுக்காக புகைப்படம் எடுத்து கொண்டு இருந்துள்ளனர். இந்த சமயத்தில்., இந்த புகைப்படத்தை மாணவி ஒருவர்., தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில்., இந்த புகைப்படத்தில் இருந்த மாணவிகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மாஃபிங் செய்யப்பட்ட நிலையில்., அமெரிக்காவில் உள்ள இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்துள்ளது. இந்த செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி., இது குறித்து தனது தோழிகளுக்கு தொடர்ப்பு கொண்டு கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் செய்வதறியாது திகைக்கவே., அந்த ஆபாச இணையத்தளத்தில் மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாகவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் இது குறித்து கல்லூரியின் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கல்லூரியின் முதல்வர்., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில்., அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஆபாச இணையத்தளத்தில் மாணவிகளின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில்., இந்த வழக்கை சைபர் கிரைம் காவல் துறை பிரிவிற்கு மாற்றம் செய்துள்ளனர்.
மேலும்., இந்தியாவில் உள்ள அனைத்து ஆபாச இணையதளங்களை காவல் துறையினர் முடக்கியுள்ள நிலையில்., வெளிநாடுகளில் இருந்து புதிய சர்வர்களின் மூலமாக ஆபாச இணையத்தளம் துவங்கப்பட்டு., அலைபேசியில் இன்னும் பார்க்கப்பட்டு வருவதாகவும் தொடர் குற்றசாட்டுகள் வருகிறது. மேலும்., முகநூலில் இருந்து பெண்களின் புகைப்படங்களை திருடி., மாஃபிங் செய்து வெளியிடும் கொடூரம் நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில்., தற்போது கொடூர கும்பலால் திருடப்படும் புகைப்படங்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை குறிவைத்து அரங்கேறி வருவதாகவும்., முகநூல் நட்பில் உள்ள நண்பர்கள் கூட இந்த செயலில் ஈடுபட்டு வரும் நிலையில்., இதனைப்போன்று ஒருவனால் இவ்வாறாக வெளிநாட்டு இணையத்தில் புகைப்படங்கள் ஆபாசமாக பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.