அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் வசித்து வரும் இளம்பெண்ணின் பெயர் அவியான வீவர் (வயது 17, Aviana Weaver). இவர் கடந்த 12 ஆம் தேதியன்று வீட்டில் இருந்து மாயமாகிய நிலையில்., இவரை காணாது தேடியலைந்த பெற்றோர்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இவருக்கு குறுஞ்செய்தி ஒன்று அலைபேசியில் வந்துள்ளது. இந்த செய்தியில்., அவியானவை மர்ம நபரால் கடத்தி வைத்துள்ளதாக இருந்துள்ளது.
இந்த விஷயத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாயார்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர்., தனது முகநூல் பக்கத்திலும்., தனது மகளை காப்பாற்றி கொடுக்குமாறு பதிவிட்டு இருந்தார்.
இந்த முகநூல் தகவல் அதிகளவில் பகிரப்பட்டதை அடுத்து., அங்குள்ள பிளாதொல்பியா பகுதியில் அவியான இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் தனது மகளின் புகைப்படத்தை கொண்டு., மகள் மாயமானது குறித்து தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில்., காவல் துறையினரும் தங்களின் சார்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., ஆபாச இணையத்தளத்தில் அவ்ளனாவின் புகைப்படங்கள் வெளியாகிள்ளது. இந்த இணையத்தில் வெளியான புகைப்படத்தை வைத்து பார்க்கையில்., அவர் மிகுந்த பயத்துடன் இருப்பதால்., இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள தாயார் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும்., தனது மகள் வீட்டை விட்டு வெளியேற காரணம் ஏதும் இல்லை என்றும்., அவர் நன்றாக படிக்கும் திறமை உடையவர்., இவருக்கு பிளாதொல்பியா பகுதியில் நண்பர்கள் யாரும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.