45 வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா?

தமிழ் சினிமாவில் இருவர் என்ற படத்தின் மூலம்  அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அதனை தொடர்ந்து அவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இராவணன், எந்திரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாலிவுட்டில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உலக அழகியான இவருக்கு ஏரளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் 2007ஆம் ஆண்டு பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் உடல் எடை அதிகரித்து சற்று குண்டாக இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது எடை குறைத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.