பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதா போட்ட அதிரடி ட்வீட்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி 89 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முடிவு பெற இருக்கின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் தற்பொழுது அதிரடி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், “வீட்டில் குடும்பத்தினரே கடந்த சில வாரங்களாக நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிசியாக இருந்ததால், என்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக உங்கள் அனைவரிடமும் என்னால் உரையாட முடியாமல் போய்விட்டது.

உங்களிடம் நான் அதிகப்படியாக விஷயங்களை பகிர்ந்து கொல்வதற்கு நான் லைவ் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவு செய்திருக்கின்றேன். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுதும் கூட பல்வேறு விஷயங்களை அப்படியே வெளிப்படையாக கூற வருவது தான் வனிதா. தற்போது இரண்டாவது முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறி உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் கண்டிப்பாக அவர் நிறைய விஷயங்களை தெரிவிப்பார். சில பல உண்மைகளைப் போட்டு உடைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த ட்வீட்டானது தற்போது வைரல் ஆகி வருகின்றது.