வெற்றிமாறன் படம் என்றாலே அதற்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அவர் பல ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் சமீபத்தில் தனுஷ் வைத்து இயக்கிய வடசென்னை படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.
இந்த படம் வசூல் ரீதியாகவும் ஹிட் தான் . இந்நிலையில் வட சென்னை படம் ஆஸ்கார்2020 ரேஸிற்கு இந்தியா சார்பில் அனுப்புகின்ற லிஸ்டில் இருந்தது.
ஆனால், கடைசியில் கல்லீபாய் படத்தை ஆஸ்கர் ரேஸிற்காக தேர்ந்தெடுத்துள்ளனர், இது தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.
ஏனெனில் தேசிய விருது கண்டிப்பாக வடசென்னைக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அது கிடைக்காதது தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வருத்தம் தான்.
அப்படியிருக்க இதிலும் வெளியேறியது கொஞ்சம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அவருடைய ரசிகர்களை.