தெலுங்கில் கடும் வீழ்ச்சியை சந்தித்த காப்பான் படம்

கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாய்ஷா நடித்த காப்பான் நேற்று திரைக்கு வந்தது. பல எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த காப்பான் பல்வேறு விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் தெலுங்கில் இப்படம் முதல் நாள் அன்றே கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது,

காப்பான் வெறும் ரூ 58 லட்சம் மட்டுமே ஷேர் வந்துள்ளதாம்.சூர்யா ரசிகர்கள் படம் தூள் என்று சொல்லிவரும் நிலையில் படம் நல்ல வசூலை சந்திப்பது கடினம் என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் காப்பான் வசூல் தெலுங்கில் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மற்றப்படி தமிழ்நாடு, கேரளாவில் இப்படத்திற்கு டீசண்ட் வசூல் தான் வருகின்றது.