வாழைப்பழம் புரோட்டின் நிறைந்த உணவு. மேலும், இது உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் அதிகப்படியான கலோரிகள் இருப்பதால் வாழைப்பழத்தை உண்ணுகையில் உடல் எடை வெகுவாக அதிகரிக்கிறது. தற்பொழுது வாழைப்பழத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வடை எப்படி செய்வதென பார்க்கலாம்.
தேவையானவை:
மைதாமாவு,
வாழைப்பழம்- 2
தேங்காய் துருவல்- அரை கப்
சர்க்கரை -இனிப்புக்கேற்ப
ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை:
வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும். அதில் துருவிய தேங்காய், தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
மைதாமாவை தனியாக கொட்டி ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பின்னர் வாழைப்பழ கலவையை மைதாவுடன் சேர்க்கவும்.
இரண்டையும் கலந்து உருட்டி மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனை பணியாரக் கல்லிலும் வேகவைக்கலாம்.
சுவையான வாழைப்பழ வடை ரெடி!!