தற்கொலைக்கு முயன்ற தமிழ் நடிகை.!! நடந்தது என்ன ?? பாலியல் புகார்

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களை குறைப்பதற்கு சட்டங்கள் கடுமையாகும் பட்சத்திலேயே., பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

இந்த நிலையில்., திரைத்துறையினை பொறுத்த வரையில்., பெண்கள் திரைத்துறையில் வாய்ப்பு கேட்டு வரும் சமயத்தில்., அவர்களை எந்த விதமான கூச்சமும் இன்றி படுக்கைக்கு அழைப்பதும் தொடர்ந்து வருகிறது.

மேலும்., நடிகைகள் தங்களுடன் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே., திரைத்துறையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் என்ற நிலையும் இருந்து வருவதாக தெரியவருகிறது. வாழ்க்கையில் முன்னேறிவிட ஆசைப்படும் பெண்களை படுக்கைக்கு அழைத்து சீரழிக்கும் கொடூரங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில்., சென்னை வடபழனியை சார்ந்த பெண்ணொருவர்., நேற்றிரவு அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்., அவரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில்., திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் நடித்து கொண்டு இருந்த துணை நடிகையான எனக்கு., பக்ருதீன் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில்., எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தான்.

மயக்கத்தில் இருந்து தெளிந்ததும் கதறியழுத என்னிடம்., பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ காட்சிகளை பதிவு செய்துள்ளதாக என்னிடம் காண்பித்து., பணம் கேட்டு மிரட்டி வருகிறான். எனது தாயாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியும் வருகிறான் என்று கூறியுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.