பசுவுக்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் அது காமதேனுவுக்கு கொடுப்பது போன்று என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனால் நம் பாவங்கள் அழியும் என கூறுவர். அந்த வகையில் எந்த, எந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் நம் ஜாதகத்தில் இருக்கும் பிரச்சினை, தோஷங்களுக்கான எந்த கிரக பிரச்சினை தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.
சூரிய கிரகம்:
கிரக மண்டலத்திற்கு நடுவில் இருபவர் சூரிய பகவான். சூரியனின் வாகனமான 7குதிரைகள் பூட்டிய தேர் வாகனம் உள்ளது. இதனால் சூரிய பகவானின் கிரக பிரச்சினை உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.
சந்திர கிரகம்:
சந்திர பகவான் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீரில் வாழும் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்குவதன் மூலம் தோஷ நிவர்த்தி ஆகும்.
செவ்வாய் கிரகம்:
செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. செவ்வாய் பகவானின் வாகனமாக ஆடு உள்ளது. அதனால் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினை குறைகின்றது. அதே போல் குரங்குகளுக்குத் தானியங்கள் அளிக்கலாம். இதன் மூலம் செவ்வாய் தோஷம் குறையும்.
புதன் கிரகம்:
உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அந்த ராசிக்காரர் மிகச்சிறந்த கல்விமானாகவும், பேச்சாளராகவும், பல சக்தியை தர வல்லவர். புதன் திசை பிரச்சினையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது மிகவும் சிறந்தது. கிளிக்கு உணவளிக்கு ஏதுவாக இல்லை என்றால், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.
வியாழன் கிரகம்: (குரு பகவான்)
நம் ஜாதகத்தில் குருபகவான் சரியான இடத்தில் அமையாமல் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாட்டுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிப்பது நல்லது. குருவின் ஆசி கிட்டும்.
சுக்கிரன் கிரகம்:
செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிர பகவான். இந்த கிரகம் நல் முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம். சுக்கிர பகவானின் அருள் பெற்று செல்வத்தை பெறலாம்.
ராகு – கேது கிரகம்:
நாய்க்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புக்கு சக்கரை, மாவு பொருட்கள் உணவாக கொடுப்பது நல்ல பலன்களை தரும்.
சனி பகவான்:
நம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி கிரகம். சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். எ.கா : எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.