இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செயல்பட்டு வந்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, ராணுவத்தில் பணியாற்ற சென்றார்.
ராணுவ பணியில் இருந்து திரும்பிய தோனி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் தன்னால் பங்கேற்க முடியாது என என்றும் இந்த இரண்டு தொடரிலும் இருந்தும் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு டோனி கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை இந்திய அணியின் தேர்வுக்குழு ஏற்றது. இதனால் நடந்து முடித்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும், தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்கா தொடரிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் பணியாற்றி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் இந்தியா – ஆப்பிரிக்கா இடையிலான தொடர் வரும் அக்டோபர் 23 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு பிறகு வங்காள தேச அணி இந்தியா வந்து விளையாடுகிறது. இந்தத் தொடரிலும் தோனி விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
வங்காளதேச தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து விளையாட உள்ளது. அப்போதுதான் இந்திய அணியின் தேர்வுக்குழுவால் இவரது பெயரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என தகவல்கள் வெளியகியுள்ளன.
ஏற்கனவே தோனிக்கு இன்னும் அணியில் இடம் கொடுக்க வேண்டுமா? என விமர்சனங்கள் எழும் நிலையில், அவரது ஓய்வு குறித்த அறிவிப்பு நீண்டு கொண்டே செல்கிறது.