நீரிழிவு நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா?

மழைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம்.

அதிலும் நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும்.

இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.

கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம்.

நாட்டு கொய்யாப்பழம் தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆப்பிளை விட கொய்யாவிற்குதான் முதல் மரியாதை தருவீர்கள்.

அதன் சத்துக்களையும் , தீர்க்கும் நோய்களையும் பற்றி தெரிந்தால் நிச்சயம் உங்கள் மார்க்கெட் பட்ஜெட்டில் கொய்யாவிற்கும் இடமிருக்கும்.

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது?

கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல

தொந்தரவுகளை ஏற்படுத்தும். இதனால் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா.
  • நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரைநோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.
  • தினமும் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். அதனால் சர்க்கரை நோயாளிகள் இந்த பழம் சாப்பிட்டவுடன்
  • சர்க்கரை அளவு கூடிடுமோ என்கிற அச்சம் கொள்ளத் தேவையில்லை.