பாகுபலி மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் அதை தொடர்ந்து சாஹோ என்கிற ஆக்ஷன் படத்தில் பிரபாஸ் நடிக்க துவங்கினார். இதுவும் பிரமாண்ட பட்ஜெட் படம் என்பதால் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனது.
சமீபத்தில் வெளிவந்த இந்த படம் தென்னிந்தியாவில் படுதோல்வியை அடைந்தது. ஆனால் ஹிந்தி சினிமா வசூலின் உதவியால் இந்த படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படத்திற்காக பிரபாஸ் மட்டும் 70 கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. இது தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.