சூர்யா சொன்னதை அப்படியே செய்து காட்டிய ரசிகர்கள்!

நடிகை தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் பரவலாக ரசிகர்கள் வட்டாரம் வைத்திருப்பவர். அவரின் படங்களுக்கு பல குடும்பங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.

பல மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழங்கி வரும் அவர் அண்மையில் பேனர் விசயத்தால் உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

அப்போது தன்னுடைய ரசிகர்களும் பேனர்களை தவிர்த்து அந்த பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என அறிவுறுத்தினார். இதனை பலரும் வரவேற்றனர்.

இதனையடுத்து கோவையை சேர்ந்த ரசிகர்கள் காப்பான் படத்திற்காக அரசு மருத்துவமனையில் 50 பேருக்கு படுக்கை விரிப்பு, தலையணை போன்ற பொருட்களை வழங்கினர்.