மாப்பிள்ளை தேடும் நடிகை அடா சர்மா!

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி அதிகம் காட்டும் நடிகைகளில் ஒருவர் அடா சர்மா. இவர் தமிழிலிலும் சில படங்களில் தோன்றியுள்ளார்.

தற்போது அடா ஷர்மா தான் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை தேடுவதாக கூறியுள்ளார். அதற்காக அவர் போட்டுள்ள கண்டிஷன்களை பார்த்தால் நிச்சயம் அனைவரும் ஷாக் ஆகிவிடுவீர்கள்.

வெங்காயம் சாப்பிட கூடாது, வீட்டில் ஜீன்ஸ் அணியலாம் ஆனால் வெளியில் சென்றால் பாரம்பரிய உடை தான், தினமும் மூன்று வேளையும் சிரித்துக்கொண்டே சமைக்க வேண்டும், alcohol மற்றும் இறைச்சி சாப்பிடக்கூடாது, அனைத்து மொழி இந்திய படங்களையும் மதிக்க வேண்டும் என அடா சர்மா கண்டிஷன் போட்டுள்ளார்.

மேலும் ஜாதி, மதம், நிறம், ஜாதகம், ஷூ சைஸ், விசா, நீச்சல் திறமை, பைசெப்ஸ் சைஸ், இன்ஸ்டா followers எண்ணிக்கை ஆகியவை பற்றி கவலை இல்லை என அடா சர்மா மேலும் குறிப்பிட்டுள்ளார்.