உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு இளைஞர்கள் கைது

ஹிக்கடுவ – பின்கந்த பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 19மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து குழல் 12 ரக உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டும் , 4 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ல பொலிஸார் சந்தேக நபர்களை நாளை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.