சர்வதேச நோய் விபரவியல் சங்கத்தினர் முதன்முறையாக தெற்காசிய பிராந்தியத்திற்கான ஒன்றுகூடலை இலங்கையில் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் அண்மையில் இந்த ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையில் சுகாதார அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ச்சியாகவும் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய இலவச சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்ல தேவையான வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இந்த கூட்டத்திற்கு 450இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுகாதார பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இவ்வமைப்பு இதுவரை 100 நாடுகளில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.