பிரபல வைத்தியசாலை ஊழியர்களின் முகம் சுழிக்கவைக்கும் செயல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள ஊழியர்கள் இருவர் தொடர்பில் நோயாளிகள் பலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த ஊழியகள் இருவரும் வைத்திய சாலைக்கு வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பகுதியில் சேவை செய்யகூடிய நபர்கள் எனவும் கூறப்படுகின்றது.

எனினும் அவர்கள் இருவரும் தமது கடமைகளினை செய்யாமல் எந்நேரமும் தொசைபேசியில் அரட்டை அடித்துகொண்டிருப்பதாகவும் அங்கு செல்லும் நோயாளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதன்காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் அதிக சிரமப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிகபடுகின்றது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளே இவர்கள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை தமது கடமை நேரத்தில் அதனை சரியாக செய்யாமல் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றமை முகம் சுழிக்கவைக்கின்றதாக சமூக ஆர்வல்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.