ஈரப்பதம் : வறண்ட சருமம் கொண்டோருக்கு பப்பாளி உதவும். பப்பாளியை அரைத்து வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி வர சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். பொலிவுடன் தோற்றமலிக்கும்.
நிறமிகளை அழிக்கும் : முகத்தில் தேவையற்ற கரும்புள்ளிகள், முகப்பரு தடையங்கள், தேமல் என இருப்பின் அவற்றை முற்றிலும் நீக்கி தெளிவான முகத்தை மீட்டுத் தரும்.
சுருக்கங்களை போக்கும் : வயதான தோற்றத்தைக் காட்டும் சுருக்கங்களை போக்கும் சக்தி பப்பாளிக்கு உண்டு. இதோடு இறந்த செல்களின் தேக்கத்தையும் அடியோடு நீக்கும்.
கருமை நீங்கும் : சருமம் வெயிலால் கருமையாகி சீரற்ற நிறத் தோற்றம் இருப்பின் உடனே பப்பாளியை மைய அரைத்து முகத்தில் தினமும் தேய்த்து வாருங்கள். இழந்தை நிறத்தைப் பெறலாம்.
முகபருக்கள் வராது : பப்பாளி பேஸ்டை வாரம் இரு முறை முகத்தில் தடவி வர முகப்பருக்கள் நீங்கும். தொடர்ந்து பப்பாளி பயன்படுத்தி வந்தாலும் பருக்கள் வராது.