பாகிஸ்தானில் காணாமல் போனதாக சொன்ன 3 சிறுவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அந்த நாட்டில் தொடரும் குழந்தை கடத்தல் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர்((kasur)) மாவட்டத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன் சுமார் 8 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் காணாமல் போனார்கள்.
அவர்களை பல இடங்களில் தேடிய போலீசார், இறுதியாக அந்த மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை அமைந்துள்ள பாலைவன பகுதியிலிருந்து சிறுவர்களின் உடல்களை அழுகிய நிலையில் சடலமாக மீட்டனர்.
சிறுவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 3 சிறுவர்களும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தது தெரிந்தது.
இக்கொடூர சம்பவத்தை அறிந்த பாகிஸ்தான் பிரதமர், குழந்தைகள் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல் துறையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து போலீசார் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி, சந்தேகத்தின் பேரில் 20 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கசூர் மாவட்டத்தில் மட்டும் குழந்தைகள் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளதால், மக்கள் யாரும் தங்களது குழந்தைகளை தனியே வெளியே அனுப்ப வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
இதனால் பெரும் அச்சத்தில் உறைந்துள்ள மக்கள், குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்பி வைக்காமல் வீட்டில் முடக்கி வைத்திருக்கிறார்கள்.