மும்பையைச் சேர்ந்த தோண்டிராம் கெய்க்வார்ட் (வயது 80) என்பவருக்கு மிலிண்ட் என்ற மகன் இருந்துள்ளார். 50 வயதான மிலிண்ட் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். இதற்கு முன்னதாகவே அவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது.
எனவே விவாகரத்து செய்த உடன் தம்முடன் தொடர்பில் இருந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மிலிண்ட்டின் தந்தை பலமுறை மறுமணம் வேண்டாம் என கூறி மறுத்துள்ளார். ஆனால், அதனை சிறிதும் காதில் வாங்கிக்கொள்ளாத மிலிண்ட் மறுமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் திருமணம் முடிந்து முதல் நாள் இரவில் தங்களது அறையில் இருந்துள்ளனர். இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது தான் அந்த விபரீதம் நடந்து முடிந்தது. மிலிண்ட்டின் தந்தை மகன் தனது பேச்சை கேட்காமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மிகவும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக கையில் கட்டையுடன் சென்ற மிலிண்ட்டின் தந்தை மகன் மற்றும் புதிய மருமகள் இருவரும் இருக்கும் அறைக்கு சென்று மிலிண்ட்டின் தலையில் பலமாக அடித்து தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக மிலிண்ட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து மிலிண்ட்டின் தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமணம் செய்து கொண்ட அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்புடன் இருக்கின்றார்.