தேனியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் சென்னையில் இருக்கும் தொழில்பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளான். அந்த சிறுவனுக்கு டிக் டாக் செயலின் மீது அதீத மோகம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவன் டிக் டாக் வீடியோ செய்து அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளான்.
இப்படிப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த சிறுவன் திடீரென மயமாகி இருக்கின்றான். பல்வேறு இடங்களில் தேடி அலைந்த தந்தை அவனை கண்டு பிடிக்க முடியாமல் இறுதியில் காவல் துறையை நாடினார். இருப்பினும் 10 மாதங்கள் கடந்தும் சிறுவனை காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறுவனின் தந்தை ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதன் காரணமாக சிறுவனின் செல்போனின் ரகசிய எண்ணை வைத்து தேடியதில் அவன் ஊத்துக்குளியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் ஊத்துகுளிக்கு விரைந்துள்ளனர். அங்கே பெற்றோருக்கு மட்டும்மல்லாது, காவல் துறையினருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
டிக் டாக் செயலி மூலம் சிறுவனுக்கு நர்ஸுடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருவரும் நட்பாக பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஊத்துக்குளியில் ஒன்றாக குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளனர். மேலும், இவர்களுக்கு 40 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.