பப்பாளியில் கலோரிகள், சர்க்கரை, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, புரோட்டீன், விட்டமின் A, B2, B3, B 6, B9, C, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
- பப்பாளி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே பப்பாளியை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
- பப்பாளியில் உள்ள அர்ஜினைன் என்னும் நொதி, ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை பிரச்சனை வராமல் தடுக்கிறது.
- நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து சளி, காய்ச்சல், இருமல் மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சனைகள் போன்றவை வராமல் தடுக்கிறது.
- பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகள் வராமல் தடுக்க உதவுகிறது.
- பப்பாளி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
- பப்பாளியில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தப் பிரச்சனை இருந்து பாதுகாக்கிறது.
- ரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவுகிறது.
- புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராடுவதுடன், புற்றுநோய் தாக்கத்தில் இருந்து தடுக்கிறது.
- குமட்டல், சோம்பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.
- பப்பாளியின் விதையை உலர வைத்து பொடி செய்து, அதனுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலை, இரவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் அழிந்துவிடும்