பிக்பாஸ் தர்ஷனுக்கு ஷெரீன் எழுதிய காதல் கடிதம்!

பிக்பாஸ் துவங்கியதில் இருந்து ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகியோர் ஒருவித நெருக்கத்தோடு தான் இருந்துவருகின்றனர். தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என தெரிந்தபிறகு ஷெரின் ஒதுங்க ஆரம்பித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு வனிதாஷெரினிடம் இது பற்றி பேசியபோது ஷெரின் கடும் கோபத்தில் சண்டை போட்டதையும் நாம் பார்த்தோம்.

இந்நிலையில் நேற்றைய பிக்பாஸில் தர்ஷனுக்கு ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளார் ஷெரின். அந்த கடிதம் ஒளிபரப்பபடாது ஏன கூறி கடிதம் எழுதும்படி பிக்பாஸ் அவருக்கு டாஸ்க் கொடுத்தார். தன்னுடைய காதலை வெளிப்படையாக அதில் எழுதிய ஷெரின், தர்ஷன் அவரை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். “You are the sunshine on a cloudy day. There’s so much I want to say. You light me the darkest parts of me. But you are blind.” என எழுதியுள்ளார் ஷெரின்.

என்ன எழுதியுள்ளார் என நீங்களே பாருங்கள்..

அதன்பிறகு அந்த கடிதத்தை தர்ஷனிடம் கொடுக்க வேண்டும் என பிக்பாஸ் கூறியதால் அதிர்ச்சியான அவர் அதை கிழித்துவிட்டார்.

தர்ஷன் சிறிது நேரம் கழித்து, அந்த கடிதத்தை படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் குப்பைத்தொட்டியை துலாவினார். ஆனால் ஒரு துண்டு கூட அதில் இல்லை என அவர் ஏமாற்றம் அடைந்தார்.