நடிகை நமீதாவிற்கு அஜித் கொடுத்த பரிசு!

பிரபல நடிகை நமீதா தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

நடிகை நமீதா தமிழில் இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவர் அஜித்துடன் நடித்த பில்லா படத்தை நம்மால் மறக்க முடியாது. அதன்பிறகு படவாய்ப்பு குறையவே, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து நமீதா தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார்.

அவரது கணவருடன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நமீதா, அஜித்துடன் நடித்த திரைப்பட அனுபவத்தை பற்றி கூறினார்.பில்லா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நமீதா தன்னுடைய சகோதரர் மற்றும் அவரது குழந்தைகள் அஜித்தை காண வேண்டுமென்று ஆசைப்படுவதாக அஜித்திடம் தெரிவித்துள்ளார். அவர்களை அழைத்து வர அஜித்திடம் அனுமதி கேட்டுள்ளார். உடனே அவர்களை வரச்சொல்லுங்கள் என்று அஜித் கூறியுள்ளார்.

அஜித்தை காண வந்த நடிகை நமிதாவின் குடும்பத்தினருக்கு மிகவும் சுவையான சாக்லேட்டுகளை பரிசாக அளித்துள்ளார் அஜித். இதனை பெற்றுக்கொண்டவர்கள் அஜித்தின் வரவேற்பைக் கண்டு வியந்துள்ளனர்.மேலும் நடிகை நமீதா பேசுகையில் , நடிகர் அஜித்துடன் நடிக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.