ஒருவரிடம் பழகும் பொழுது அவருடன் நாம், பேசி புரிந்து கொள்வதை விட பார்த்தே பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் உடல் மொழிக்கு அத்துணை வலிமை இருக்கின்றது என்பது மறுக்க முடியாதது.
சில சினிமாக்களில் கூட இந்த விதமான வசனங்களை காண முடியும், ” என்ன காதலிக்கவில்லை என அவள், வாய் கூறியது. வாய் கூறுவது பொய்யென கண் காட்டிக்கொடுத்தது. ” அது என்ன தான் வசனம் என்றாலும் அந்த வசனத்திற்குள் இருக்கும் உண்மையை ஆதரித்து தான் ஆக வேண்டும்.
மனிதர்களிடம் இருந்து உடல்மொழி வெளிப்படும் பொழுது, இதில் பெரும்பங்கு வகிப்பது அவர்களின் கை தான். கைகளின் செயல்பாடுகளின் மூலமே ஒருவரின் மனநிலை அதிகமாக பிரதிபலிக்கின்றது. இதனால் தான் ஒருவரை முதன் முதலில் காணும் பொழுது அவருடன் கைகுலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இரண்டு நபர்கள் சந்திக்கும்போது கைகுலுக்குவது இயல்பான செயல். ஆனால், மேலைநாடுகளில் உறவுகள் மேம்பட மிகப் பெரிய பங்கை கைகுலுக்கல்கள் வகிக்கின்றது.
ஒவ்வொரு தருணத்திலும் யார் முதலில் கைநீட்டுவது? என்ற ஒரு சிக்கலை ஒவ்வொருவரும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கைகுலுக்க முதலில் கை நீட்டுபவர் தாழ்ந்தவர் என்றும், இரண்டாவதாக கை நீட்டுபவர் முக்கியமானவர் என்றும் ஒருக் கருத்து பொதுவாக இருக்கின்றது.
ஆனால், யதார்த்தத்தில் முதலில் கைகுலுக்க கை நீட்டுபவர் நட்பில் உயர்ந்தவர். என உடல்மொழி ஆய்வு கூறுகிறது. எந்த ஒரு உருக்கமான சூழலிலும் இத்தகையவர்கள் இயல்பாகி விடும் குணம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
மேலும், சிலரின் கைகளை குலுக்கும் போது திடகாத்திரமான குலுக்களாக அது அமையும். இதன் மூலம் நமக்கு நம்பிக்கை ஏற்படும் என்கிறது ஆய்வு. மேலும், இது பொன்னர் உறுதியான கைகுலுக்கலைக் காட்டும் பெண்கள் திறந்த மனம் கொண்டவர்களாகவும், விசாலமான எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.
இரண்டு நபர்கள் சந்தித்து கைகுலுக்கும்போது, அவர்களுக்கு இடையே அதிகாரம் – சமரசம் – பணிவு என 3 விதமான மனோபாவங்களில் ஏதாவது ஒன்று மௌனமாக வெளிப்படுகின்றது. இதை கவனித்து அறிவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த கைகுலுக்கல்.
நாம் கைகுலுக்கும் போது உற்று கவனித்தால், “இவன் என்னை அதிகாரம் செய்ய முயற்சிக்கிறான், இவனிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவன் அதிகாரம் செலுத்த முற்படுகிறான்” என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம் என்கிறது ஆய்வு.