ஏரியில் மூழ்கிய சிறுவன்.! காப்பாற்றப்போய் சிக்கிய பரிதாபம்.!

அரியலூர் மாவட்டத்தில், செந்துறை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் ஆணைமுத்து, பழனிவேல் என்பவரின் மகன் ஜெகன் இருவரும் நமங்குணத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

மருதமுத்து என்பவரின் மகன் அன்பரசன் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பருக்காக இருந்துள்ளார். சொக்கநாதபுரத்தில் இருக்கும் நொண்டிக் கருப்பன் ஏரியில் மூவரும் குளிக்கச் சென்றுள்ளனர். மழையின் காணமாக ஏரியில் அதிக தண்ணீர் இருந்துள்ளது.

இந்நிலையில், அன்பரசன் முதலில் ஏரியில் இறங்க எதிர்பாராத விதமாக வழுக்கிக்கொண்டு தண்ணீரின் ஆழத்திற்கு சென்றுள்ளான் அவர் தத்தளிப்பதை பார்த்த மற்ற இருவரும் அவனை காப்பாற்ற ஏரியில் குதித்து தண்ணீரில் மூழ்கினர். அடுக்கில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தோர்கள், சத்தமிட பின்னர் கிராம மக்கள் வந்து அவர்களை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். அண்மையில் தூர்வாரப்பட்டதன் காரணமாக ஆழம் தெரியாமல் மூவரும் சிக்கி மூழ்கி இறந்துள்ளனர். ஊர் மக்கள் மிகவும் சோகத்துடன், ” ஒண்ணா படிச்சானுங்க, எங்க போனாலும் ஒண்ணா தான் போவானுக, இப்ப ஒன்னாவே போய் சேந்துட்டானுங்க” என கதறி அழுத்துள்ளனர்.