போட்டியாளர்களை கலாய்த்த பிக்பாஸ்..! ட்ரோல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 1 வாரமே உள்ள நிலையில், இன்றைய எபிஷோடில் பட ப்ரோமோஷனுக்காக முன்னாள் போட்டியாளர் ஜனனியும், ரித்விகாவும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர்.

இதற்கிடையில், இன்றைய வேக்கப் பாடலாக பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல் போடப்பட்டது. இது என்ன பாடல், எந்த படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதே தெரியாமல் போட்டியாளர்கள் குதித்துக் கொண்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் மன்னரான தர்ஷனை பாட்டு பாடி எழுப்பி விட்டனர்.

இதையடுத்து, ஷெரின் குப்பைத்தொட்டியில், கிழித்துப் போட்ட லெட்டரை எடுத்து ஒட்ட வைத்து படித்துக் கொண்டிருந்தார் தர்ஷன்.

இதனால், ஷெரின் தர்ஷனிடம் கோபப்பட, உடனே ஆசையாக பேசி ஷெரினை சமாதானப்படுத்திவிட்டார் தர்ஷன்.

இந்நிலையில், நேற்றைய எபிஷோடில் நடந்த நிகழ்வுகளை கலாய்க்கும் வகையில், ட்ரோல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

குறித்த வீடியோவை பாருங்கள்..