கிழித்து குப்பையில் போட்ட லெட்டரை திருட்டுத்தனமாக எடுத்து படித்த தர்ஷன்..!!!

இன்றைய எபிஷோடு ஆரம்பித்ததே வெறித்தனமாக தான். ஆம் தளபதியில் பிகில் படத்த்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல் காலை அலாரமாக போட்டியாளர்களுக்கு போடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மன்னாராக முடிசூட்டப்பட்ட தர்ஷனை போட்டியாளர்கள் பாட்டு பாடி எழுப்பிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஷெரின் தான் தர்ஷனுக்காக எழுதியிருந்த லெட்டரை கிழித்து குப்பையில் போட்டிருந்தார்.

இந்நிலையில், ஷெரின் குளிக்க சென்ற பின்பு, தர்ஷன் குறித்த லெட்டரை குப்பையில் இருந்து எடுத்து முகேனின் உதவியுடன் ஒட்டவைத்து படித்து எழுதியிருந்ததை படித்து தெரிந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து, படித்ததோடு விடாமல், ஷெரினிடம் சென்று நீங்கள் எழுதியது நன்றாக இருந்தது. ஏன், இன்னமும் லெட்டர் எழுதவில்லை. பேப்பர் இல்லையா என்றெல்லாம் கேள்வி எழுப்பிய தர்ஷன் என்று கேட்க, இதனால் கோபமடைந்த ஷெரின், நீ ஏன் அதனை படித்தாய். அது என்னுடைய தனிப்பட்ட ரகசியம். ஏன் அப்படி செய்தாய் என்று கூறி தர்ஷனிடம் சரவெடியாக வெடித்தார்.

பின்பு, ஷெரினிடம் சென்று தான் மட்டுமே அதனை எடுத்து ஒட்ட வைத்து படித்ததாக ஒப்புக்கொண்டார். எனக்காக எழுதிய லெட்டரை நான் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீ குளிக்கச் சென்ற போது எடுத்து படித்தேன் என்றார். இதற்கு ஒன்றும் சொல்மால், என்னிடம் தனியாக சொல்லியிருக்கலாம். மற்ற போட்டியாளர்கள் முன்பு கூறியது தான் வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.