சமூகவலைதளங்களில் அடித்துக்கொள்ளும் அபிராமி, சாக்ஷி…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது காதலரை தெரிவு செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பத்திலிருந்தே வந்தவர் அபிராமி.

பாத்திமா பாபு வெளியேறியவுடன் பிக்பாஸ் குறித்து பேட்டி கொடுக்கையில், இங்காவது யரையாவது பிடித்துவிட வேண்டும் என்று அபிராமி குறித்து கூறியிருந்தார்.

அதே போன்று அபிராமி வந்ததும் கவினைக் காதலிப்பதாக கூறினார். ஆனால் கவின் மறுத்தநிலையில் முகேனை நண்பராக நினைத்து பழகி வந்து பின்பு காதலிக்கவும் ஆரம்பித்தார்.

பின்பு வனிதா ரீ எண்ட்ரி கொடுத்த பின்பு இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்டது. அபிராமி உள்ளே இருந்த வரை முகேன் அபியை காதலிக்கவில்லை என்றே கூறினார். பின்பு அபிராமி வெளியேறிய பின்பு அவரது உடைந்த மெடலை ஒட்ட வைத்துக்கொண்டிருந்தார்.

அதேப் போல பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின்னர் அபிராமி பல்வேறு போட்டியாளர்களின் குடும்பத்தினரை சந்தித்து வருகின்றார்.

இந்நிலையில் அபிராமியின் நடவடிக்கையினால் கடுப்பான சாக்க்ஷி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து அவர்களிடம் தவறான கருத்தினை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். அப்படியே பேசும் போது தவறாக எதையும் கூறாமல் நல்ல விடயங்களை மட்டும் கூறுங்கள் என்று கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான அபிராமி, பிக்பாஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள் என்றும் அதை விட்டு நான் வெளியே வந்துவிட்டேன். தற்போது படப்பிடிப்பிலும் எனது வேலையிலும் கவனம் செலுத்தி சந்தோஷமாக இருக்கிறேன். எனவே, பிக்பாஸ் பற்றி எதுவும் எனக்குத் தேவையில்லை என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அபிராமியினை சாக்ஷி மறைமுகமாக பேசி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய ரசிகர்களை திட்டினாள் நாள் எரித்துவிடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,பொறாமை பிடித்த நபர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு டிப்ஸ் கொடுங்கள். நீங்கள் தான் என்னை வெறுக்கும் வகையில் மெசேஜ் செய்திருந்தீர்கள். ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும் நீங்களா நேர்மையை பற்றி பேசுகிறீர்கள் என்று சாக்க்ஷி பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருப்பது போன்றே தற்போது இருவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குவாதம் செய்து வருகின்றனர்.