ஐட்டம் பாடலுக்கு படு மோசமாக குத்தாட்டம் போட்டுள்ள டப்ஸ்மாஸ் புகழ் மிர்னாலினி..!

டிக்டாக் என்ற செயலி வருவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தது டப்ஸ்மாஸ் தான்.

இந்த டாப்ஸ்மாஷ் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பெங்களூரில் வசிக்கும் மிருணாளினி என்பவரின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் செம்ம வைரல்.

மிருணாளினிக்கு டப்ஸ்மாஷ் மூலம் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன. தற்போது இவர் ‘நகல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா போன்ற பலரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்டடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நடித்துளளார்.

இந்த படத்திற்கு “வால்மீகி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் ஒரு காட்சியில் படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த விடியோவை கண்ட பலரும் ஹோம்லி கேர்ள் மிர்னாலினியா என்று வாயில் அடித்து புலம்பி வருகின்றனர்.