உலக அளவில் அழகான ஆண்கள் ரேங்கில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருபவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். அவர் பல ஹாலிவுட் பிரபலங்களை வீழ்த்தி முதலிடம் பிடித்து வருகிறார்.
Kaho Naa Pyaar Hai படத்தின் மூலம் இவர் 2000 ஆண்டில் அறிமுகமானபோது இளம்பெண்களை இவர் அதிகம் கவர்ந்தார். அந்த சமயத்தில் இவருக்கு 30 ஆயிரம் பெண்களிடம் இருந்து திருமண ப்ரோபோசல்கள் வந்ததாம்.
இதை தற்போது அவர் கபில் ஷர்மா ஷோவில் கூறியுள்ளார்.
அதே வருடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் சுசானா கானை திருமணம் செய்துகொண்டார். 14 வருடங்கள் கழித்து அவர்கள் விவகாரத்து செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.